பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

Update: 2021-11-24 14:06 GMT
ஊட்டி

குன்னூரில் தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள சிம்ஸ் பூங்காவில் நுற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் பல வகையான செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2-வது சீசனையொட்டி பூங்காவில் பூத்துக்குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.  பூங்காவின் ஒரு பகுதியில் குறிஞ்சி செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த செடிகளில் குறிஞ்சி மலர்கள் பூக்க தொடங்கி உள்ளது. 

இது ஸ்டபிலான்தஸ் மினியேச்சர் வகையை சேர்ந்த குறிஞ்சி ஆகும். நீல நிறத்தில் பூங்காவுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. படகு இல்லம், இந்திய வரைபட வடிவம், நுழைவுவாயில் பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இந்த வகை மலர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மை உடையது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் அவர்கள் புகைப்படம் எடுத்து செல்கிறார்கள்.

மேலும் செய்திகள்