புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-11-24 17:46 GMT
செய்யாறு

அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 வீடு கட்ட எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பாப்பந்தாங்கல் கிராமத்தில் காலனியையொட்டி அரசு நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் இருளர் பழங்குடியினர் உள்பட 10 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து பசுமை வீடு கட்ட அவர்களுக்கு அரசாணை வழங்கப்பட்டது. இதனையடுத்து நேற்று சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுத்தம் செய்து உள்ளனர். 

 சாலை மறியல்

அப்போது காலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் செய்யாறு-ஆற்காடு சாலையில் பாப்பந்தாங்கல் கூட்ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காலனி மக்கள் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

போக்குவரத்து பாதிப்பு

அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்