புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து

ராஜபாளையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தினை எம்.பி., எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.

Update: 2021-11-24 20:35 GMT
ராஜபாளையம்,
ராஜபாளையத்திலிருந்து வெம்பக்கோட்டைக்கும், வெம்பக்கோட்டையிலிருந்து ராஜபாளையத்திற்கும்,  ராஜபாளையத்திலிருந்து கன்னித்தேவன்பட்டி பஸ்சை சிவலிங்காபுரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டி பள்ளி ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.  அந்த கோரிக்கையை அமைச்சர் ராஜகண்ணப்பனின் கவனத்திற்கு கொண்டு சென்று பஸ் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அமைச்சரும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பஸ்கள் இயக்க ஆணையிட்டார். அதனைத்தொடர்ந்து ராஜபாளையம் முதல் வெம்பக்கோட்டை வரை செல்லும் பஸ்சை தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது அவர் கூறியதாவது:- 
 பொதுமக்கள் மற்றும் வணிக பெருமக்களின் கோரிக்கையை ஏற்று தளவாய்புரத்திலிருந்து, சென்னை, திருப்பூர், கோவை போன்ற வெளிப்புற நகரங்களுக்கும், ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் விரைவில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது என கூறினார். இந்த நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்