பேரிடர் காலங்களில் மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை. முத்தரசன் குற்றச்சாட்டு

பேரிடர் காலங்களில் மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2021-11-25 18:44 GMT
குடியாத்தம்

பேரிடர் காலங்களில் மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

குறைகளை கேட்ட முத்தரசன்

குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்று ஓரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே கவுண்டன்ய மகாநதி ஆற்றோரம் வசித்து வந்தவீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிக்கபட்டவர்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் சந்தித்து  குறைகளையும், பாதிப்புகளையும் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

நிதி கொடுப்பதில்லை

பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளையும், பாதிப்புகளையும் தமிழக அரசின் கவணத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் கிடைக்க வலியுறுத்துவேன். பொதுவாக மாநிலங்களுக்கு கிடைக்கும் வரிகளையும் மத்திய அரசே எடுத்துக்கொள்கிறது. மாநில அரசுகளுக்கு முறையாக நிதி கொடுப்பதில்லை. மத்திய அரசின் மூலமாக இதுபோன்ற பேரிடர் காலத்தில் அதிகாரிகள் வருவதும், ஆய்வு செயவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் மாநில அரசுகள் கேட்ட நிதியை கொடுத்ததில்லை. நம்முடைய மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தி கேட்ட நிதியை பெற்று வழங்குமென நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில துணைசெயலாளர் மூ.வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் ஏ.சி.சாமிக்கண்ணு, முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.லதா, ஒன்றிய செயலாளர் துரைசெல்வம், கவுன்சிலர் பவித்திரா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்