நெல்லில் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலை

காரியாபட்டி அருகே நெல்லில் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Update: 2021-11-25 19:47 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி அருகே நெல்லில் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
நெல் சாகுபடி 
 காரியாபட்டி தாலுகா, சத்திரம் புளியங்குளம் ஊராட்சி, எஸ். கடம்பங்குளம் கிராமத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். 
இந்நிலையில் நெல் நடவு நட்டு பரிச்சல் வரும் நிலையில் நெல் முழுவதிலும் நோய் தாக்கி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதேபோன்று சென்ற ஆண்டும் இந்த கிராமத்தில் நெல் பரியும் நேரத்தில் கதிர்கள் முழுவதும் வெள்ளையாக பரிச்சலாகி எந்த விவசாயிகளுக்கும் மகசூல் கிடைக்காத நிலை இருந்து வந்தது. இதனால் இந்த விவசாயிகள் தங்களது விவசாயத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். 
நிவாரணம் 
சென்ற ஆண்டு போல இந்த ஆண்டும் நெல்லில் நோய் தாக்கி முற்றிலும் பாதிக்கப்பட கூடிய நிலையில் இருந்து வருகிறது. விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் நெல் நாற்றை  பரிசோதனைக்கு எடுத்து சென்றுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். 
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்