வனவிலங்குகளை வேட்டையாடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிவகிரி அருகே வனவிலங்குகளை வேட்டையாடியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-11-25 20:27 GMT
சிவகிரி:
சிவகிரிக்கு மேற்கே கருப்பசாமி கோவில் பீட் எல்கைக்கு உட்பட்ட ராஜசிங்கப்பேரி கண்மாய் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடியதாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரம் மேலத் தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் மதன்ராஜ் (வயது 23), காசிராமன் மகன் மகேஷ் (19), இந்திரா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜீப் டிரைவர் குருவையா (32) ஆகியோைர கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சுந்தரராஜபுரத்தை சேர்ந்த செல்லப்பாண்டியன் மகன் அன்பழகன் (32), கனியராஜ் மகன் விஜயராஜ் (21), முருகேசன் (60), காசிராமன் (42) ஆகியோரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காசிராமனை வனத்துறையினர் கைது செய்து சிவகிரி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் சிவகிரி கோர்ட்டில் நீதிபதி கே.எல்.பிரியங்கா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விசாரித்து காசிராமனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் அம்பை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் காசிராமன் மீது ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வனச்சரக அலுவலகத்தில் வன குற்ற வழக்குகள் உள்ளதால், மண்டல வன பாதுகாவலர் டாக்டர் செந்தில்குமார், மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகன் ஆகியோர் பரிந்துரையின்பேரில் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ், கைதான காசிராமனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான உத்தரவு நகலை சிறை அதிகாரிகளிடம் சிவகிரி ரேஞ்சர் சுரேஷ் வழங்கினார்.

மேலும் செய்திகள்