சேலத்தில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

சேலத்தில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

Update: 2021-11-25 20:57 GMT
சேலம்
சேலம் மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா சேலம் டி.வி.என். திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து விழாவில் பங்கேற்ற 200 கர்ப்பிணிகளுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு, பழம் உள்ளிட்ட சீர்வரிசை தாம்பூலங்களை கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர். விழாவில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசும் போது, கர்ப்பிணிகள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.

மேலும் செய்திகள்