மழைநீரில் மூழ்கிய பயிர்கள்

சாத்தூர் பகுதியில் ெபய்த தொடர்மழையினால் பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Update: 2021-11-27 19:28 GMT
சாத்தூர், 
சாத்தூர் பகுதியில் ெபய்த தொடர்மழையினால் பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
தொடர்மழை 
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சாத்தூர் பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கன மழையால் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எண்ணற்ற கண்மாய்கள் நிரம்பின. 
இந்த கண்மாய்கள் நிரம்பிய நிலையில் செல்வதற்கு வழி இன்றி வயலுக்குள் தண்ணீர் புகுந்தது. அணைக்கரைப்பட்டி, சின்னஓடைப்பட்டி, பெரியஓடைப்பட்டி, பெத்துரெத்துபட்டி, சின்னதம்பியாபுரம், ஓ.மேட்டுப்பட்டி, ஒத்தையால், சூரங்குடி, அழகாபுரி ஆகிய பகுதியில் நன்கு விளைந்த மல்லி, பாசி, உளுந்து, பருத்தி பயிரிடப்பட்ட வயல்களுக்குள் மழை நீர் தேங்கி நிற்கிறது. 
நிவாரணத்தொகை 
இதனால் பயிர்கள் அழுகும் நிைல உள்ளது. ஆதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் எண்ணற்ற கண்மாய்கள் பெருகி வருவதுடன், நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது. 
இது ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும் நாங்கள் கஷ்டப்பட்டு கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் தற்போது மழைநீரில் மூழ்கி உள்ளன. 
எனவே மழையினால் ஏற்பட்ட சேதங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன் அவர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்