கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2021-11-29 20:08 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் கோவிலின் உண்டியலை உடைத்து, உண்டியலில் இருந்த பணத்தை திருடியுள்ளனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான கண்காணிப்பு கேமரா மற்றும் மானிட்டரையும் மர்ம நபர்கள் திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து நேற்று தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர். 
இந்த கோவிலில் ஏற்கனவே கடந்த மே மாதம் உண்டியல் உடைப்பு சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து கோவிலை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள், கண்காணிப்பு கேமராவையும் திருடிச்சென்று பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டார்மங்கலம் கிராம முக்கியஸ்தர்கள், பாடாலூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவம் குறித்து பாடாலூர் இன்ஸ்பெக்டர் ஜெயராம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்