10 கிராமங்களை மழைநீர் சூழ்ந்தது

உப்பாற்றில் வெள்ளப்பெருக்கால் 10 கிராமங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.

Update: 2021-11-30 18:12 GMT
மானாமதுரை,
உப்பாற்றில் வெள்ளப்பெருக்கால் 10 கிராமங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.
தொடர் மழை
தொடர் மழைகாரணமாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக செல்லும் உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் செய்களத்தூர் கண்மாய் நிறைந்து கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் செய் களத்தூர், குருந்தகுளம், கள்ளர் வலசை, ஒத்தவீடு, வேலூர், முருகபஞ்சான் உள்பட 10 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொது மக்கள், பள்ளி, கல்லூரி, மருத்துவமனைக்குகூட செல்ல முடியாமல் அவதிப் படுகிறார்கள். மேலும் இந்த கிராமங்களில் உள்ள 150 ஏக்கர் அளவில் நெற்பயிர்கள் இடுப்பளவு தண்ணீரில் முழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
3 இடங்களில் உடைப்பு
 உப்பாற்றில் இருந்து செய்களத்தூர் கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாயில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கண்மாய்க்கு தண்ணீர் செல்கிறது. கண்மாய் ஏற்கனவே நிறைந்து மறுகால் செல்வதால் கரை உடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் அளவும் ஆற்றில் அதிகரித்து கொண்டே செல்வதால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
எனவே கால்வாய் உடைப்புகளை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் விரைந்து அடக்க வேண்டும். மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர்மதுசூதன் ரெட்டி, தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் தண்ணீர் சூழ்ந்த இடத்தை பார்வையிட்டனர். கார் செல்லமுடியாத பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வெள்ள சேதபகுதிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்