பலத்தமழையால் வீடுகள் இடிந்தன

பலத்தமழையால் வீடுகள் இடிந்தன. வெள்ளத்தால் கிராமமக்கள் தவித்துவருகின்றனர்.

Update: 2021-11-30 20:05 GMT
சிவகங்கை, 
பலத்தமழையால் வீடுகள் இடிந்தன. வெள்ளத்தால் கிராமமக்கள் தவித்துவருகின்றனர்.
பலத்த மழை
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது ஏற்கனவே மழையினால் நிரம்பியிருந்த கண்மாய் மற்றும் குளங்களில் தண்ணீர் வரத்து அதிகரித் ததால் அதில் இருந்து தண்ணீர் கால்வாய்களில் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. 
காளையார்கோவிலை அடுத்த சிலுக்கு பட்டி அருகே உள்ள பறக்குளம் கிராமத்தில் 8 வீடுகள் இடிந்து விழுந்தன. இதேபோல் கல்லல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, பிளார், கூத்தலூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 9 வீடுகள் இடிந்து விழுந்தன. இதேபோல கருவேலி அடுத்த மாரந்தை கிராமத்தில் இருந்து கோர வலசை கீழ குடியிருப்பில் வசிக்கும் மக்கள் அந்த பகுதியில் உள்ள கால்வாய் வழியாகத் தான் செல்ல வேண்டும் இந்த நிலையில் அந்த கால்வாயில் தண்ணீர் அதிக அளவு ஓடியதால் கிராம மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்
இதைத்தொடர்ந்து சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கல்லல் ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, பிளார் மற்றும் கூத்தலூரில் சமீபத்தில் பெய்த கனமழையால் இடிந்த 9 வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ. 3000 மற்றும் 5 கிலோ அரிசி வழங்கினார். இதேபோல் பறக் குளம் கிராமத்தில் மழையால் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்ட 8 பேருக்கு தலா ரூ. 2000 நிவாரண நிதியை வழங்கினார். அவருடன் கல்லல் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் கே.ஆர். செந்தில்நாதன் மற்றும் சேவியர் தாஸ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் கோமளவள்ளி பாஸ்கரன், கூத்தலூர் கிராம நிர்வாக அலுவலர் அருள்ராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.
மழை அளவு
மாவட்டத்தில் நேற்று காலை 8  மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-  சிவகங்கை -32,மானாமதுரை- 37, இளையான்குடி-38, திருப்புவனம்-95.20, தேவகோட்டை- 17.60, காரைக்குடி- 1.60, திருப்பத்தூர்-11.50, காளையார்கோவில் 37, சிங்கம்புணரி 17.40

மேலும் செய்திகள்