விருதுநகர், செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ெரயில்

சபரிமலை சீசனையொட்டி சென்னையிலிருந்து விருதுநகர், செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ெரயில் இயக்க தென்னக ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2021-12-01 19:45 GMT
விருதுநகர்,
சபரிமலை சீசனையொட்டி சென்னையிலிருந்து விருதுநகர், செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ெரயில் இயக்க தென்னக ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. 
சிறப்பு ெரயில்
ஆண்டுதோறும் வழக்கமாக சபரிமலை சன்னதி திறக்கப்பட்டவுடன் சென்னையிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ெரயில் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை தென்னக ெரயில்வே நிர்வாகம் சென்னை சென்ட்ரலில் இருந்து பொள்ளாச்சி வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ெரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
 இந்த ெரயில் தென் மாவட்டம் வழியாக செல்ல வாய்ப்பு இல்லாததால் இப்பகுதியில் உள்ள சபரிமலை பக்தர்கள் கொல்லம் செல்வதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
சபரிமலை 
 எனவே தென்னக ெரயில்வே நிர்வாகம் வழக்கம்போல் சென்னையிலிருந்து மதுரை, விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ெரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 இதன் மூலமே தென் மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சிரமமில்லாமல் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். மேலும் தென்னக ெரயில்வே நிர்வாகம் பரிந்துரைத்துள்ள திருநெல்வேலி-கோவை, ராமேசுவரம்-கோவை,  சென்னை -திருப்பதி உள்பட அனைத்து புதிய ெரயில்களையும் இயக்க வேண்டும்.
அத்துடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தாம்பரம் -செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ெரயிலை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்