வாலிபருக்கு ஆயுள் தண்டனை

பல்லடத்தில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-12-02 17:43 GMT
திருப்பூர்
பல்லடத்தில் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கல்லூரி மாணவி தற்கொலை
பல்லடம் குங்குமபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 22). இவர் பல்லடத்தை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். அந்த மாணவி பல்லடம் அரசு கல்லூரியில் கடந்த 2019-ம் ஆண்டு முதலாம் ஆண்டு படித்து வந்தார். 
இந்த நிலையில் சந்தோஷ் அந்த மாணவியை திருமணம் செய்ய மறுத்து ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி வீட்டில் தீக்குளித்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஆயுள் தண்டனை
இதைத்தொடர்ந்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியது, ஜாதி பெயரை சொல்லி திட்டிய குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் மனோகரன் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்