சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜை

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2021-12-02 18:53 GMT
வத்திராயிருப்பு, 
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. 
சதுரகிரி கோவில் 
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு பூைஜ நடந்தது. மழையின் காரணமாக இந்த பூஜையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 
இதனால் வனத்துறை கேட்டின் முன்புற பகுதியில் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பிரதோஷத்திற்கு உண்டான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
ஆலங்குளம் 
 ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்தி பட்டி அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சங்கரலிங்கசாமி, சிமெண்டு ஆலை காலனி முருகன் கோவில் வளாகத்தில் உள்ள ஆகாய லிங்கேஸ்வரர் கோவில், எதிர்கோட்டை சுனை கண்ட லிங்கேஸ்வரர் கோவில், கண்மாய் பட்டி குபேர லிங்கசாமி ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. 
முன்னதாக பால், தயிர், நெய், சந்தனம், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் நந்திக்கு அபிேஷகம் நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேத்தூர்
 சேத்தூர் திருக்கண்ணிஸ்வரர், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி, சொக்கநாதன்புத்தூர் தவ நந்தீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில்  பிரதோஷத்தை ஒட்டி நந்திக்கும், சுவாமிக்கும், பால், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்