15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய பெரிய ஏரி

15 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய ஏரி நிரம்பியது.

Update: 2021-12-06 19:45 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 60-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. இந்நிலையில் ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 166 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியானது தொடர் மழையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நிரம்பி, கடைக்கால் வழியாக தண்ணீர் வழிகிறது. ஏரி நிரம்பியதையடுத்து கிராம மக்கள் செட்டிகுளம் சாவடி பகுதியில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக ஏரியின் கடைக்கால் பகுதிக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து பொங்கல் வைத்து, படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து மலர்தூவி தண்ணீரை வரவேற்றனர். இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் ஏரி நிரம்பி வழிவதால் உபரிநீரில் இளைஞர்கள் குளித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதில் விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்