அகழ்வாராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை அமைச்சர் ஆய்வு

வெம்பக்கோட்டையில் அகழ்வாராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.

Update: 2021-12-08 19:35 GMT
தாயில்பட்டி, 
தமிழக அரசு வெம்பக்கோட்டையை கீழடி போன்று பழங்கால வரலாற்று பெருமைகளை கண்டறிய அகழ்வாராய்ச்சி செய்ய அறிவித்துள்ளது.  இந்தநிலையில் வைப்பாற்றின் கரையோர பகுதியினை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு நடத்தினார். அப்போது மண் மாதிரிகளை சேகரித்த தொல்லியல் துறை அதிகாரிகளிடம் அமைச்சர் விவரம் கேட்டறிந்தார். ஆய்வின் போது கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார், வெம்பக்கோட்டை கிளைசெயலாளர் ரவி சங்கர், விஜயகரிசல்குளம் கிளை செயலாளர் கருப்பசாமி, காங்கிரஸ் கிழக்கு வட்டார தலைவர் காளியப்பன், ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்