நங்கநல்லூரில் சாலையில் திடீர் ராட்சத பள்ளம் - போக்குவரத்து துண்டிப்பு

நங்கநல்லூர் 5-வது மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலையில் சுமார் 7 அடி அகலத்துக்கு ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Update: 2021-12-15 10:18 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூர் 5-வது மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையின் நடுவில் திடீரென சுமார் 7 அடி அகலத்துக்கு ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதை கண்ட அப்பகுதி மக்கள், சென்னை குடிநீர் வாரியத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் ஆலந்தூர் குடிநீர் வாரிய என்ஜினீயர் ஜான்சிராணி, முன்னாள் கவுன்சிலர் என்.சந்திரன், நடராஜன் மற்றும் அதிகாரிகள் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை நேரில் பார்த்தனர். பின்னர் பள்ளத்தை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைத்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணியும் உடனடியாக தொடங்கப்பட்டது. அதுவரை பாதாள சாக்கடை கழிவுநீரை மாற்று வழியில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்