பேரையூரில் 10 கிராம மக்கள் சாலை மறியல்

தடுப்பணையில் மணல் அள்ளுவதை தடுக்கக்கோரி பேரையூரில் 10 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-12-24 20:55 GMT
பேரையூர், 

தடுப்பணையில் மணல் அள்ளுவதை தடுக்கக்கோரி பேரையூரில் 10 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

பேரையூரில் உள்ள முக்குசாலை பகுதியில் அத்திபட்டி, குடிசேரி, சலுப்பட்டி, தொட்டணம்பட்டி, வீராளம்பட்டி, மங்கல்ரேவு, பெரியபூலாம்பட்டி, கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 10 மணிக்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மணல் அள்ளுவதை தடுக்க கோரிக்கை

அப்போது கிராம மக்கள் கூறியதாவது:-
 பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டி ராமசாமிபுரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வரத்து கால்வாயில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதில் மர்ம நபர்கள் சிலர் மணல் அள்ளியுள்ளனர். இதனால் தடுப்பணை பள்ளமாகியுள்ளது. மேலும் மணல் அள்ளும் போது வரத்து கால்வாய் தடுப்பணையை சேதப்படுத்தியும் உள்ளனர். மேலும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையில் உள்ள ஆவணங்களின்படி நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டு உள்ளோம். தடுப்பணையில் மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

4 மணி நேரம்

இது குறித்து தாசில்தார், மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
ேநற்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சாலை மறியல் நடந்தது. இதனால் அந்த பகுதியில் 4 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்