ஊக்கத் தொகை வழங்கக்கோரி நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள்தூய்மைப் பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

ஊக்கத் தொகை வழங்கக்கோரி நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள்தூய்மைப் பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

Update: 2022-01-05 17:49 GMT
கள்ளக்குறிச்சி

முன்களப்பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.15 ஆயிரம் ஊக்கத் தொகையை வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநில இணை செயலாளர் கனி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபுவிடம் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர். போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஜெய்சங்கர், ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் முற்றுகை போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்