36 ஆயிரத்து 516 மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி

மதுரை மாநகரில் 36 ஆயிரத்து 516 மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளன என்று மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.

Update: 2022-01-08 13:29 GMT
மதுரை, 
மதுரை மாநகரில் 36 ஆயிரத்து 516 மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளன என்று மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.
மருத்துவ முகாம்
மதுரை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆரப்பாளையம், இஸ்மாயில்புரம் பகுதிகள், கோமதிபுரம் 6-வது மெயின் சாலை, மேலவாசல் சமுதாய கூடம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை மையங்களில் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார். 
அப்போது அவர் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும், பரிசோத னைக்கு வருபவர்களின் பெயர், முகவரியினை சரியாக பதிவு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்பின் அவர் கூறியதாவது:-
மதுரை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு முன்னேற் பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
தடுப்பூசி 
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பதால் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மையங்கள் 100 வார்டு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அவரவர் பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் மேற் கொள்ளப் பட்டு வருகிறது. 
மேலும் இந்த முகாமில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 15 வயது முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள 36 ஆயிரத்து 516 மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும் முதல் தவணை தடுப்பூசி 9 லட்சத்து 74 லட்சத்து 492 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 6 லடசத்து 31 ஆயிரத்து 449 பேருக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்