கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Update: 2022-01-10 08:43 GMT

கச்சிராயப்பாளையம்

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில் கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் கல்வராயன்மலையில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆரம்பூண்டி புதூர் கிராம ஓடையில் அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மந்திரி(வயது 26) என்பவர் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி  வைத்திருந்த 800 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்த போலீசார் அதை தரையில்கொட்டி அழித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மந்திரியை தேடி வருகின்றனர்.

அதேபோல் வனப்பகுதியில் மற்றொரு இடத்தில மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்த 200 லிட்டர் சாராய ஊறலையும் தரையில் கொட்டி அழித்த போலீசார் இதில் தொடர்புடைய மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்