பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-10 17:19 GMT
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மூத்த நிர்வாகி இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ஜூனன், ரவி, நகர செயலாளர் எழிலரசு, பகுதி செயலாளர்கள் சக்திவேல், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில்,  அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும். அரசு ஆஸ்பத்திரியில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிரந்தர முதன்மை குடியுரிமை மருத்துவரை நியமிக்க வேண்டும். மகப்பேறு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் காப்பகம் இணைந்து 24 மணி நேரமும் செயல்படுத்த வேண்டும். சி.டி. ஸ்கேன் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் குமார், சிவா, அன்பு, ஜீவானந்தன், செல்லன், சுதாபாரதி, சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்