கோவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி

சின்னமனூரில் கோவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-01-12 16:06 GMT
சின்னமனூர்: 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் ஊழியர்கள், அர்ச்சகர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவிலில் நேற்று நடந்தது. இதில் உத்தமபாளையம், பெரியகுளம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் பணியாற்றும் ஊழியர்கள், அர்ச்சகர்கள் என மொத்தம் 65 பேருக்கு சீருடைகள் மற்றும் புத்தாடைகளை கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.


இதில் ஆண் அர்ச்சகர்கள், பூசாரிகள் ஆகியோருக்கு வேட்டியும், பெண் பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள 685 கோவில்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு அந்தந்த கோவில் நிர்வாகத்தின் மூலமாக சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழாவில் கோவில் நிர்வாகிகள், சின்னமனூர் தி.மு.க. பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்