வருகிற 23 ந் தேதி 1055 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 23 ந் தேதி 1055 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்

Update: 2022-01-13 04:38 GMT
கள்ளக்குறிச்சி

ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்   போலியோ சொட்டு மருந்து முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

போலியோ சொட்டு மருந்து

மாவட்டத்தில் வருகிற 23-ந் தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார மையங்கள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், சுங்கவரி வசூல் மையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் 1,055 முகாம் அமைக்கப்படவுள்ளது. 
இதில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊட்டச்சத்துத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த பணியாளர்கள் பணிபுரிய உள்ளார்கள். 

1 லட்சம் குழந்தைகளுக்கு

முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் 1,30,902 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் பொதுமக்களிடையே முறையாக விளம்பரம் செய்து 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சுகதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி மற்றும் வருவாய், சுகாதாரம், ஊட்டச்சத்து, பள்ளிக்கல்வி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்