பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 12 பேருக்கு அபராதம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 12 பேருக்கு சிவகாசி யூனியன் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Update: 2022-01-13 15:41 GMT
சிவகாசி, 
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 12 பேருக்கு சிவகாசி யூனியன் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
புகார்
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகஅளவில் பயன்படுத்தி வருவதாக யூனியன் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீனிவாசன், ராமராஜ் ஆகியோர் யூனியனுக்கு உட்பட்ட விஸ்வநத்தம் பஞ்சாயத்து பகுதியில் தீவிர ஆய்வு செய்தனர்.  அப்போது 12 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களிடம் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தலா ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டது. 
இலவச துணிப்பை
பின்னர் பஞ்சாயத்து பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பஞ்சாயத்து தலைவர் நாகராஜ், செயலர் செல்வம் உள்ளிட்ட பஞ்சாயத்து நிர்வாகிகத்தினர் பொதுமக்களுக்கு வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணிப்பைகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

மேலும் செய்திகள்