கொரோனா கட்டுப்பாட்டை மீறி காளை விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

காளை விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

Update: 2022-01-13 17:51 GMT
கலசபாக்கம்

கொரோனா கட்டுப்பாட்டை மீறி காளை  விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட வீரளூர், மேல்சோழங்குப்பம், கடலாடி, கீழ்பாலூர் ஆகிய 4 கிராமங்களில் நேற்று போகி பண்டிகையை முன்னிட்டு காளை விடும் விழா நடந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் மக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்பதால் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தடையை மீறி போலீசாரின் அனுமதி பெறாமல் காளை விடும் விழா நடத்திய 4 கிராமத்தில் உள்ள விழா குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடைத்துறை டாக்டர் வித்யாசாகர் கடலாடி போலீசில் புகார் கொடுத்தார். 
அதன்பேரில் 100-க்கும் மேற்பட்டோர் மீது கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்