பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம். உதவி போலீஸ் சூப்பிரண்டு தகவல்

பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்

Update: 2022-01-13 17:54 GMT
வேலூர்

பொதுமக்கள் ஆன்லைன்மூலம் புகார் அளிக்கலாம் என்று வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காவலர்கள் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் போலீஸ் நிலையங்களுக்கு சென்று புகார் அளிப்பதை தவிர்க்கும் வகையில் வேலூர் உட்கோட்டத்தில் ஆன்லைனில் புகார் அளிப்பது தொடர்பாக புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் கூறுகையில், வேலூர் உட்கோட்டத்தில் பொதுமக்கள் புகார் அளிக்க போலீஸ் நிலையங்களுக்கு நேரடியாக செல்வதை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மூலமாக புகார்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 8438620416 என்ற வாட்ஸ்அப் எண்ணையும், policecontroldesk.velloretown@gmail.com என்ற இணையதள முகவரியும் பொதுமக்கள் பயன்படுத்தி புகார் அளிக்கலாம். காவல்துறையின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்