விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி சென்னை ராமகிருஷ்ண மடத்தில் தேசிய இளைஞர் விழா

விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி சென்னை ராமகிருஷ்ண மடத்தில் தேசிய இளைஞர் விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராமகிருஷ்ண மடத்தினர் செய்து இருந்தனர்.

Update: 2022-01-14 11:08 GMT
விவேகானந்தரின் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை விவேகானந்தர் இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தர் உருவப்படத்துக்கு ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத்தலைவர் கவுதமானந்தஜி மகராஜ் மாலை அணிவித்து, மலர் தூவி ஆரத்தி எடுத்து வழிபட்டார். ராமகிருஷ்ண மடத்தில் பிரார்த்தனை, வேத கோஷம், பஜனை நிகழ்ச்சி நடந்தது. விவேகானந்தர் இயற்றிய சுதேச மந்திரம் மாணவர்களால் படித்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இந்திய கடலோர காவல் படை துணை ஐ.ஜி. சனாதன் ஜேனா, டைக்கூன் அகாடமியின் நிறுவனர் சத்தியகுமார், மாவட்ட நீதிபதி எஸ்.எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோர் பேசினார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக நிகழ்ச்சிக்கு குறைவான மாணவர்களே அழைக்கப்பட்டு இருந்தனர். அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முன்னதாக ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் தர்மிஷ்டானந்தர் வரவேற்றார். முடிவில் சசிசிகானந்தா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராமகிருஷ்ண மடத்தினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்