சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சோழிங்கநல்லூர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தற்காலிக சோதனை அடிப்படையில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-01-14 12:44 GMT
இது தொடர்பாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மேடவாக்கம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை செல்வதற்கு இடதுபுறமாக சென்று யூ டர்ன் செய்து சர்வீஸ் சாலை செல்வதை விட்டு சோழிங்கநல்லூர் சந்திப்பில் நேராக அக்கரை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.

மேடவாக்கம் சாலையில் இருந்து சோழிங்கநல்லூர் சந்திப்பு வழியாக வலது புறம் திரும்பி நாவலூருக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மேடவாக்கம் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் சோழிங்கநல்லூர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பாமல் நேராக செல்ல அனுமதிக்கப்படும்.

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து துரைப்பாக்கம் செல்ல சோழிங்கநல்லூர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பாமல் வலதுபுறம் திரும்பி துரைப்பாக்கம் செல்ல அனுமதிக்கப்படும். நாவலூர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் சோழிங்கநல்லூர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி கிழக்கு கடற்கரை சாலை செல்ல அனுமதி இல்லை. இனிமேல் நாவலூர் திசையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் சோழிங்கநல்லூர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மேடவாக்கம் சாலையில் சுங்கச்சாவடிக்கு முன்பு யு-டர்ன் செய்து மீண்டும் சோழிங்கநல்லூர் சந்திப்பு வழியாக நேரே கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்