விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

Update: 2022-01-16 17:58 GMT
திருமங்கலம், 
திருமங்கலம் சந்தைபேட்டையை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் திருமங்கலம்-உசிலம்பட்டி பிரிவு அருகே நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்துள்ளார். அப்போது மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்