3 நாள் தடைக்கு பின் செஞ்சி கோட்டைக்கு வந்த சுற்றுலா பயணிகள்

3 நாள் தடைக்கு பின் செஞ்சி கோட்டைக்கு வந்த சுற்றுலா பயணிகள்

Update: 2022-01-17 17:29 GMT
செஞ்சி

கொரோனா தொற்று காரணமாக கடந்த 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 3 நாட்கள் செஞ்சி கோட்டைக்கு வர சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.  இந்த நிலையில் நேற்று அரசு விடுமுறை என்பதால் செஞ்சிக் கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். இதில் உள்ளூர்வாசிகளை விட வெளியூர்களில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம். இவர்கள் செஞ்சிக்கோட்டையின் பல்வேறு இடங்களை பார்வையிட்டு தாங்கள் கொண்டு வந்த தின்பண்டங்கள் மற்றும் உணவுகளை கோட்டையின் அழகை கண்டு ரசித்தபடியே உண்டு மகிழ்ந்தனர். 

செஞ்சிக்கோட்டை அலுவலர் மேற்பார்வையில் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செஞ்சிக் கோட்டைக்கு செல்வதற்கு ஆன்லைன் மூலமே டிக்கெட் எடுத்து செல்லவேண்டும். சில நேரங்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுப்பதில் சிரமமாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதியுற்றனர். நீண்ட நேரத்திற்கு பிறகு டிக்கெட் எடுத்துவிட்டு கோட்டைக்கு சென்றனர். 
ஒரு சிலர் டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்