அதிக வட்டி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி; தனியார் நிறுவன மேலாளர் மீது வழக்கு

அதிக வட்டி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-01-19 18:46 GMT
நொய்யல், 
தனியார் நிறுவன மேலாளர்
நொய்யல் அருகே உன்னூத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 40). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் மாதேஸ்வரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர்.
இந்தநிலையில் மோகன்ராஜ் ரூ.5 லட்சம் கொடுத்தால் அதற்கு அதிகவட்டி மற்றும் ஊக்கத்தொகை கொடுப்பதாக மாதேஸ்வரனிடம் கூறியுள்ளார்.
ரூ.5 லட்சம் மோசடி
இதனைதொடர்ந்து மாதேஸ்வரன் கூறியதை நம்பி தும்பிவாடி பகுதியை சேர்ந்த வரதராஜன் மகன் கருப்பசாமி (29) என்பவர் மோகன்ராஜிடம் ரூ.5 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வட்டியோ, ஊக்கத்தொகையோ கொடுக்காமல் அவர் ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த  கருப்பசாமி வேலாயுதம்பாளையம் போலீசில்  புகார் அளித்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி அதிக வட்டி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன மேலாளர் மோகன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்