புகார் பெட்டி

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2022-01-22 20:57 GMT
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புழுதி பறக்கும் சாலை
மதுரை மாவட்டம் திருமங்கலம் சோனை மீனாநகர் தெருவில் உள்ள தார்சாலை சேதமடைந்து மண் சாலையாக மாறி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சாலையில் செல்லும் போது புழுதி பறப்பதால் நோயாளிகளும், முதியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அர்ஜூன், திருமங்கலம்.
கால்நடைகளால் விபத்து அபாயம்
மதுரை காளவாசல் பகுதியில் ஆடு, மாடுகள், நாய்கள் சாலையில் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. மேலும் அவைகள் சாலையில் ஆங்காங்கே படுத்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது. சாலையில் செல்பவர்களையும் மாடுகள் அச்சுறுத்தி வருகின்றன. எனவே, சாலையில் இடையூறாக திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். 
மகேந்திரன், மதுரை.
குப்பை தொட்டியான கழிவுநீர் கால்வாய்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி கே.வி.எஸ். நகர் மற்றும் அண்ணாநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாய் குப்பை ெ்தாட்டியாக மாறி வருகிறது. மேலும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? 
கோகுல்,காரைக்குடி.
சீரமைக்கப்படாத ெநற்களம்
விருதுநகர் மாவட்டம் ெவம்பக்கோட்ைட நரிக்குடி அருகில் உள்ள புலிப்பாறைப்பட்டியில் பயன்பாட்டில் இருக்க வேண்டிய நெற்களம் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது அறுவடை காலம் என்பதால் விவசாயிகள் களம் வசதி இல்லாமல் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதனால் நெற்களங்களை சீரமைத்து தர வேண்டும். 
மகாவிஷ்ணு, வெம்பக்கோட்டை.
தேங்கி நிற்கும் கழிவுநீர் 
மதுரை அலங்காநல்லூர் தெ.மேட்டுப்பட்டி ஊராட்சியில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் ஓடுகிறது. இதனால் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. அதில் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும். 
பொதுமக்கள், அலங்காநல்லூர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள் 
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் 15-வது வார்டு பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் குப்பைகள் மலை போல குவிந்து கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவார்களா? 
சுரேஷ், தொண்டி.
பஸ் வசதி தேவை
 திருமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை நேரத்தில் சாத்தங்குடி கிராமத்துக்கு நகர பஸ்கள் இல்லை. இதனால் சாத்தங்குடி கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். திருமங்கலத்தில் இருந்து அதிகாைலயிலேயே சாத்தங்குடி கிராமத்துக்கு நகர பஸ்கள் இயக்கப்பட்டால் அந்த பகுதியை சேர்ந்த முதியோர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கும், பொதுமக்கள் வேலைக்கு செல்வதற்கும் பயன் உள்ளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட மாநகர போக்குவரத்து துறையினர் திருமங்கலத்தில் இருந்து அதிகாலை நேரத்தில் சாத்தங்குடிக்கு பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ேதசியமணி, சாத்தங்குடி. 

மேலும் செய்திகள்