வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி; 2 பேர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி குறித்து திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார்.

Update: 2022-01-23 11:14 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாங்கல் சாலையைச் சேர்ந்தவர் ராகுல் (வயது 26). இவர் மார்க்கெட்டிங் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்தார். ஏற்கனவே வேலை பார்த்த இடத்தில் அவருக்கு பழக்கமான திருவொற்றியூரைச் சேர்ந்த தனலட்சுமி (46) என்பவர் தனது தோழி துபாயில் உள்ளதாகவும், அவரின் அழகு நிலையத்தில் மேலாளராக பணியில் சேர்த்து விடுவதாகவும் கூறினார். 

இதற்காக ராகுல், வெளிநாடு செல்ல தனலட்சுமியின் கையில் ரூ.25 ஆயிரத்தை கொடுத்ததுடன், அவரது வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்தையும் செலுத்தினார். ஆனால் அதற்கு சொன்னபடி வேலை வாங்கி தராமலும், ராகுலின் செல்போன் அழைப்பை தவிர்த்தும் வந்தார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த ராகுல், இந்த பண மோசடி குறித்து திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவொற்றியூரைச் சேர்ந்த தனலட்சுமி மற்றும் வெங்கடேசன் (46) ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி முன்னிலையில் அவர்கள், ராகுலிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக கூறி ரூ.1 லட்சத்தை செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தனர்.

மேலும் செய்திகள்