கார், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களா?

கார், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களா

Update: 2022-01-23 15:56 GMT
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் நேற்று முழு ஊரடங்கு அமலானது. ஊரடங்கில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் ஆட்டோ, கார் இயங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வாறு இயங்கும் ஆட்டோ, கார்களில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தினார்.
அதற்கேற்ப நேற்று திருப்பூர் ரெயில் நிலையம் முன் போலீசார் இதற்காக நியமிக்கப்பட்டனர். ஆட்டோ, கார்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களா? என்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஆட்டோ, கார் டிரைவர்களுக்கும் அறிவுரை வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்