முழு ஊரடங்கையொட்டி ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

முழு ஊரடங்கையொட்டி ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளி மாநிலங்களில் இருந்து வந்த வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Update: 2022-01-23 16:58 GMT
ஓசூர்:
முழு ஊரடங்கையொட்டி ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளி மாநிலங்களில் இருந்து வந்த வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில், கர்நாடகாவில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை, நேற்று காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. 
ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், போலீசாரும், சுகாதாரத்துறையினரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளி மாநிலங்களில் இருந்து வரும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் பயணிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
கிருமிநாசினி தெளிப்பு
அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே, மேற்கொண்டு தமிழகத்திற்குள் செல்ல வாகனங்களை அனுமதித்தனர். தேவையின்றி கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். மேலும், தமிழகத்திற்குள் நுழைந்த அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 
கர்நாடக மாநில பஸ்களில் ஏறி, தமிழகம் நோக்கி வந்த பயணிகள், கர்நாடக எல்லையிலேயே இறக்கி விடப்பட்டனர். இதனால் அவர்கள் அங்கிருந்து ஆட்டோக்களில் ஓசூர் நோக்கி வந்தனர்.

மேலும் செய்திகள்