வாலிபரிடம் மோசடி செய்த ரூ.44 ஆயிரம் மீட்பு

வாலிபரிடம் மோசடி செய்த ரூ.44 ஆயிரம் மீட்கப்பட்டது.

Update: 2022-01-25 18:51 GMT
நாகப்பட்டினம்:
நாகூர் சாமு தம்பி மரைக்காயர் தெருவை சேர்ந்தவர் செய்யது(வயது30). இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந்தேதி வங்கியில் இருந்து பேசுவதாக செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஏ.டி.எம். கார்டு முடங்க போவதாகவும், அதனை சரி செய்ய ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய செய்யது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.44 ஆயிரத்து 740 எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து செய்யது, நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹாிடம் புகார் கொடுத்தார். இந்த புகார் சைபர் கிரைம் பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் போலீசார் விசாரணை நடத்தி, ரூ.44 ஆயிரத்து 740 பணத்தை மீட்டனர். இதையடுத்து கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, செய்யதுவிடம் பணத்தை ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்