‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-01-25 19:28 GMT
பகலில் எரியும் தெருவிளக்குகள் 

மதுரை மாநகராட்சி 24-வது வார்டு பசும்பொன்தெரு 1-வது குறுக்கு தெருவில் உள்ள தெருவிளக்குகள் பகல் நேரத்திலும் எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தனசேகரன், திருப்பாைல, மதுரை. 

வாய்க்கால் தூர்வாரப்படுமா? 

மதுரை பாண்டி கோவில் ரிங் ரோட்டில் அருகே உள்ள மழைநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளதால் தண்ணீர்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் அருகில் உள்ள பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே, வாய்க்காலை தூர்வாரிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஹபிப், மதுரை. 

சுகாதார வளாகம் தேவை

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் பொது சுகாதார வளாகம் இல்லை. இதன் காரணமாக இப்பகுதி மக்களும், வெளியூர்களில் இருந்து வருபவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதியில் பொது சுகாதார வளாகம் கட்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
மாரீஸ்வரன், கள்ளிக்குடி. 

மேலும் செய்திகள்