திருத்தணியில் தீக்குளித்த வாலிபர் குடும்பத்துக்கு எச்.ராஜா நேரில் ஆறுதல்

திருத்தணியில் தீக்குளித்த வாலிபர் குடும்பத்துக்கு எச்.ராஜா நேரில் ஆறுதல் கூறி சென்றார்.

Update: 2022-01-27 11:49 GMT
திருத்தணியில் தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த புளியில் பல்லி ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அவதூறு தகவலை பரப்பியதாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரம் சரவண பொய்கை குளம் அருகே வசித்து வந்த நந்தன் (வயது 65) என்பவர் மீது திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.



இதனால் மனமுடைந்த நந்தனின் மூத்த மகன் குப்புசாமி (35), தனது தந்தை மீது பொய்யான வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறி கடந்த 11-ந் தேதி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதை அறிந்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கி சென்றார்.

இந்த நிலையில் நேற்று பா.ஜ.க.தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அங்கிருந்து தற்கொலை செய்துகொண்ட குப்புசாமி வீட்டுக்கு சென்று அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறி சென்றார்.

மேலும் செய்திகள்