உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.4¾ லட்சம் பறிமுதல்

தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி உரிய ஆவணம் இல் லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சத்து 94 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-01-28 13:19 GMT
சிவகங்கை, 
தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி உரிய ஆவணம் இல் லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சத்து 94 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நன்னடத்தை விதிகள்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 27-ந்் தேதி முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 
இதன்படி பணம் கொண்டு செல்பவர்கள் ரூ. 50 ஆயிரத் திற்குமேல் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தேர்தலை யொட்டி பண நடமாட்டம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 24 மணி நேரமும் செயல்படும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 
திருப்புவனம் சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு தாசில்தார் மைலாவதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன், ஏட்டுகள் சிவன், அசோக்குமார் ஆகியோர்களை கொண்ட பறக்கும் படையினர் சிவகங்கை நகர் திருப்பத்தூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுஇருந்தனர்.
 அப்போது அந்த வழியில் வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் ரூ. 4 லட்சத்து 94 ஆயிரம் இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த லாரியில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டையில் உள்ள ஒரு புகையிலை நிறுவ னத்தை சேர்ந்தவர்கள் என்றும் சிவகங்கை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள கடைகளில் இருந்து விற்பனை செய்த தொகையை வசூல் செய்து கொண்டு செல்வதாக தெரிவித் தனர். 
ஒப்படைப்பு
ஆனால் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந் தது. இதைத்தொடர்ந்து அந்த தொகையை தாசில்தார் மைலா வதி பறிமுதல் செய்து சிவகங்கையில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்