வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

கொரோனா கட்டுப்பாடு காரணமாக வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2022-01-28 16:25 GMT
வேளாங்கண்ணி:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யதடை, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி, இரவு நேர ஊரடங்கு ரத்து, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் திரளானோர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்