531 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

531 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.

Update: 2022-01-28 19:48 GMT
பெரம்பலூர்:
தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 20-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 193 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 338 இடங்களிலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன. தடுப்பூசி போட தகுதி வாய்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும், இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு, 2-ம் தவணை செலுத்த உள்ளவர்களும், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கடந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியான சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களும் சிறப்பு முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்