வேளாண்மை இயக்குனர் ஆய்வு

ராமநாதபுரத்தில் வேளாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-01-30 17:32 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் வந்த மாநில வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை தேவிபட்டினம் அரசு தென்னை நாற்று பண்ணையை ஆய்வு செய்தார். அப்போது, தென்னை நாற்றுப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகளின் தரம், நிழற்காய்ச்சல், மணல் பதப்படுத்துதலில் உள்ள தென்னை நெற்றுகள், நாற்றாங்காலில் உள்ள தென்னங் கன்றுகளையும் ஆய்வு செய்தார். நல்ல தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் நிலையான தென்னை மரங்களையும் ஆய்வு செய்தார். பண்ணையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும், வசதிகளையும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் டாம்சைலஸ், துணை இயக்குனர்கள் சேக் அப்துல்லா, கண்ணையா, பாஸ்கரமணியன், உதவி இயக்குனர்கள் கோபாலகிருஷ்ணன், நாகராஜன், செல்வம், பண்ணை மேலாளர் அம்பேத்குமார், உதவி வேளாண்மை அலுவலர் சுதாமதி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்