தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-01-30 17:39 GMT
திண்டுக்கல்: 

குப்பைகள் அகற்றப்படுமா? 
திண்டுக்கல் மாநகராட்சி செல்லாண்டி அம்மன் கோவில் தெருவில் குப்பைத்தொட்டி இல்லாததால் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-உஸ்மான், திண்டுக்கல்.

தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்
வத்தலக்குண்டு கே.கே. நகர் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வழிப்பறி, திருட்டு பயமும் உள்ளது. இதன் காரணமாக பெண்கள் இரவில் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே கே.கே. நகர் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வசந்த், வத்தலக்குண்டு.

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு 
ஆத்தூர் தாலுகா பாளையன்கோட்டை ஊராட்சியில் கூலம்பட்டி, காமன்பட்டி ஆகிய கிராமங்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே ஊராட்சிக்கு உட்பட்ட பிரவான்பட்டி கிராமத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. எனவே எங்கள் கிராமத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 
-க.ரமேஷ் குமார், பிரவான்பட்டி. 

மேலும் செய்திகள்