வைப்பாற்றை ஆக்கிரமித்த கருவேல மரங்கள், பிளாஸ்டிக்கழிவுகள்

சாத்தூர் வைப்பாற்றில் கருவேலமரங்களும், பிளாஸ்டிக்கழிவுகளும் ஆக்கிரமித்து உள்ளன. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Update: 2022-02-06 19:52 GMT
சாத்தூர், 
சாத்தூர் வைப்பாற்றில் கருவேலமரங்களும், பிளாஸ்டிக்கழிவுகளும் ஆக்கிரமித்து உள்ளன. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். 
வைப்பாறு 
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையினால் சாத்தூர் வைப்பாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகு வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றில் கிடந்த பிளாஸ்டிக்கழிவுகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. 
இந்த பிளாஸ்டிக்கழிவுகள் அனைத்தும் கருவேல மரத்தில் அப்படியே தங்கி உள்ளன. 
இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயநிலை உள்ளது. 
நடவடிக்கை 
நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியும் இன்னும் ஒரு சில இடங்களில் கருவேல மரங்கள் அகற்றப்படவில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 
தற்போது சாத்தூர் வைப்பாற்றில் தண்ணீர் வற்றிய நிலையில் காணப்படுகிறது. எனவே ஆற்றை ஆக்கிரமித்த கருவேல மரங்களையும், ஆற்றில் தேங்கி உள்ள பிளாஸ்டிக்கழிவுகளையும் உடனே அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்