தேசிய லோக் அதாலத்

தேசிய லோக் அதாலத் நடக்கிறது

Update: 2022-03-10 17:52 GMT
ராமநாதபுரம், 
தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நடைபெற உள்ளது. மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெறும் இந்த வருடத்தின் முதல் தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற முறையில் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் 8 அமர்வுகளில் நடைபெற உள்ளது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் முடியும் வழக்குகளில் இருதரப்பினருக்கும் வெற்றி ஏற்பட்டதாக அமையும். இதில் தீர்வு காணப்படும் வழக்குகளில் மேல்முறையீடு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வழக்கில் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாக திரும்ப வழங்கப்படும். மாவட்டத்தில் வங்கிகளில் உள்ள வராக்கடன் வழக்குகள்மற்றும் தொழிலாளர்கள் இழப்பீடு, சிறு குற்ற வழக்குகள், குடும்ப நலவழக்குகள், சிவில் வழக்குகள் போன்ற சமரசம் செய்து கொள்ளக்கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும் செய்திகள்