பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்வு-குண்டு மல்லி கிலோ ரூ.1,500-க்கு விற்பனை

பரமத்திவேலூர் ஏல சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குண்டு மல்லி கிலோ ரூ.1,500-க்கு விற்பனையானது.

Update: 2022-03-12 14:25 GMT
பரமத்திவேலூர்:
பூக்கள் ஏலம்
பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அவற்றை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்து வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லை கிலோ ரூ.600-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.150-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கும் ஏலம் போனது. 
விலை உயர்வு
இந்தநிலையில் இன்று நடைபெற்ற ஏல‌த்தில் பூக்கள் 2 மடங்கு விலை உயர்ந்து விற்பனையாகின. அதன்படி, குண்டு மல்லி கிலோ ரூ.1500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.300-க்கும், அரளி கிலோ ரூ.120-க்கும், ரோஜா கிலோ ரூ.240-க்கும், முல்லை கிலோ ரூ.1400-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.200-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.1200-க்கும் ஏலம் போனது. 
திருமண முகூர்த்தங்கள் அதிகமாக இருப்பதால் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்களின் விலை உயர்வால் அதனை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்