தர்மபுரி ஜெயம் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சிறப்பு பயிற்சி முகாம்

தர்மபுரி ஜெயம் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2022-03-20 17:47 GMT
தர்மபுரி:
தர்மபுரி ஜெயம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு பட்டாலியன் ராணுவ பிரிவு யூனிட் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் ராணுவ அலுவலர்கள் மனோகரர், பால்பாண்டி, ஜெயம் கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முருகன், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் தீர்த்தகிரி ஆகியோர் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த முகாமில் நவீனகால துப்பாக்கி சுடும் பயிற்சி, வரைபட பயிற்சி, யோகா பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 
மேலும் மாணவர்களுக்கு அமைதி மற்றும் ஒற்றுமை குறித்து பேச்சு போட்டி, ஓவிய போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜெயம் கல்லூரி இயக்குனர் மனோஜ் மவுரியா பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கல்லூரி முதல்வர் சுப்பராயன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இதில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள்; மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்