வேளாண் விற்பனைக்குழு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

வேளாண் விற்பனைக்குழு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்

Update: 2022-03-31 19:38 GMT
விருதுநகர்
விருதுநகர் வேளாண் விற்பனைக்குழு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் நேற்று மாலை திடீெரன சோதனையில் ஈடுபட்டனர். இந்த அலுவலகத்தில் வணிகர்கள் உரிமம் பெறுவதற்கு லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், பாரதி பிரியா ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது கண்காணிப்பு அதிகாரி அருப்புக்கோட்டை வழங்கல் துறை தாசில்தார் ஷாஜகான் உடனிருந்தார். அப்போது அங்கிருந்த வேளாண் விற்பனை குழு செயலாளர் வேலுசாமியிடம் ரூ.35 ஆயிரம் இருந்தது. ஆனால் அவர் அந்த பணத்தை எல்.ஐ.சி. பிரீமியம் கட்டுவதற்காக வைத்திருப்பதாக கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்