ராம நவமி விழாவையொட்டி தர்மபுரி சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் ராம நவமி விழாவையொட்டி சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

Update: 2022-04-12 17:54 GMT
தர்மபுரி, ஏப்.13-
தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் ராம நவமி விழாவையொட்டி சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
ராம நவமி விழா
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் ராமநவமி விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார சேவைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சாமிக்கு நவமி அபிஷேகமும், ஸ்ரீராமர் அவதார அலங்கார சேவையும் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நாளான நேற்று சென்னகேசவ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து  இழுத்து தேரை நிலை சேர்த்தனர். விழாவையொட்டி காலை சாமி சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்